பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இதனால் , வடமேற்கு பிராந்தியத்தில் வரும் 10ம் தேதி வரை 165 இண்டிகோ உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.