மணல்தான் கண்ணாடியா மாறுது

291
Advertisement

காலைல எழுந்திருச்சதும் என்ன பண்ணுவீங்கன்னு கேட்டா…
என்ன சொல்லுவீங்க…

மொதல்ல கண்ண முழுப்பேன் அப்படின்னுதான ஜோக்கடிப்பீங்க…
அப்புறமா நேரா எழுந்துபோய் உங்க முகத்த கண்ணாடியில பத்து
நிமிஷமாவது பாத்தா தான் திருப்தியாவீங்க….பொழுது விடிஞ்சிட்டுங்கற
எண்ணத்துக்கே வருவீங்க…

நீங்க முகம் பாத்த அந்தக் கண்ணாடி, மணலால்தான்
செய்யப்படுதுங்கறது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்…!

கடல் மணல், ஆற்று மணல், பிறவகை மணல்தான் இந்தக்
கண்ணாடித் தயாரிப்பதற்கான மூலப்பொருள்.

இந்த வகை மணல நல்லா சூடாக்கி, உருக்குறாங்க….
அப்படி உருக்குனதும் அது திரவ நிலைக்கு மாறிடுது…

இந்த திரவத்தை வார்ப்புகள்ல ஊத்தி அழகான வடிவமாக்குறாங்க…
இப்ப முகம் பாக்குற கண்ணாடி ரெடி.

இன்னும் கொஞ்சம் விரிவாப் பாப்போமா…

குவார்ட்ஸ் மணல் என்கிற சுத்தமான சிலிக்காவை ஆயிரத்து
700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு சூடுபடுத்துறாங்க…

அப்படி சூடுபடுத்தும்போது குவார்ட்ஸ் மணல் திரவமா உருகி
நாம வீட்ல தின்பண்டம் செய்றதுக்குப் பயன்படுத்துற பாகு மாதிரி ஆகிடுது.

இப்படி மணல உருக்கும்போது சோடியம் கார்பனேட்ங்கற சோடா
சாம்பலையும் கால்சியம் கார்பனேட்ங்கற சுண்ணாம்புக்கல்லையும்
சேர்க்குறாங்க…சோடா சாம்பல சேத்தவுடனே மணல் வேகம்வேகமா
உருக ஆரம்பிக்கும்.

ஆனா இதுல ஒரு ஆபத்தும் இருக்கு.. அது என்னன்னா… இப்படியே
உருகிட்டுப்போனா அது தண்ணீர்ல கரையக்கூடிய தன்மைக்கு மாறிடும்.

அதத் தடுக்கறதுக்காகத்தான் சுண்ணாம்புக்கல் சேர்க்கப்படுது.
இப்போ நமக்கு சோடா சுண்ணாம்பு சிலிக்கா கண்ணாடி கிடைக்கும்.

சர்க்கரப் பாகு மாதிரி உள்ள இந்தப் பாகுவ என்ன பண்றாங்கன்னா..

வார்ப்புகள்ல ஊத்துறாங்க…அந்த அடிப்படையில பல்வேறு வடிவங்கள்ல
கண்ணாடி தயாராகுது.

கண்ணாடிக் கதவு, கார்க் கண்ணாடி, கட்டடக் கண்ணாடி, மூக்குக்
கண்ணாடி, தொலைக்காட்சிப் பெட்டியில உள்ள திரை, கம்ப்யூட்டர்,
செல்போன்ல உள்ள ஸ்கிரீன்…இப்படி எல்லாமே மணல்ல இருந்துதான்
தயாரிக்கப்படுது…

இந்தக் கண்ணாடி முதன்முதல்ல எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதாம் தெரியுமா…

சுமார் 7 ஆயிரம் வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் அது.
இன்றைய சிரியாவுல… வீடு கட்டுதற்கு பாறைகள கல் மாதிரி
வெட்டியெடுத்து பயன்படுத்தினாங்க…அப்ப இந்த பாறைக் கல்ல
விற்க வியாபாரிகள் வந்திருக்காங்க…அப்ப பசிக்க ஆரம்பிச்சதும்
சாப்பாடு செய்றதுக்காக கடற்கர ஓரமா வந்திருக்காங்க..

ரெண்டு கல்ல அடுப்பு மாதிரி வைச்சு அது மேல சமையல்
பாத்திரத்த வைச்சு தீமூட்டி சமைக்க ஆரம்பிச்சிருக்காங்க…
மெய்மறந்து அவங்க பேசிக்கிட்டு இருந்ததுல சமையல மறந்துட்டாங்க…
ரொம்ப நேரம் கழிச்சி திடீர்னு ஞாபகம் வந்து போய் பாத்தா…

அடுப்பக் காணோம்…சினிமாவுல வடிவேலு கிணத்த காணோம்னு
சொன்ன மாதிரி இவங்க அடுப்பக் காணோம்னு கம்ப்ளய்ன்ட்
பண்ணலாம்னு பாத்தா…

கொஞ்ச தூரம் தள்ளிப் பாத்தா ஒரு அழகான பொருள் இருந்துச்சு…
அதுல அவங்க முகமும் தெரிஞ்சுச்சு… எப்படின்னு யோசிச்சா
இந்த அடுப்பு தீயில கல் ரெண்டும் உருகி தண்ணீயா ஓடி
கண்ணாடியா மாறியிருக்குங்கறத உணர்ந்தாங்க..

அழகா இருக்கற நம்மள அழகாவே காட்டுறதுக்கு எப்படியோ…
ஒரு வழி பிறந்திருக்கு பாத்தீங்களா…