Sunday, December 28, 2025

தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து : பயணிகள் மீது மோதியதில் ஒருவர் பலி

கோவையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து பயணிகள் மீது மோதியதில் 19 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து வாளையாருக்கு செல்வதற்காக 96 என்ற எண் கொண்ட தாழ்தள சிறப்பு சொகுசு பேருந்து கிளம்பியது.

அப்பொழுது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அதன் அருகில் நின்றிருந்த மற்றொரு மினி பேருந்து உட்பட நான்கு பேருந்துகள் மற்றும் பயணிகள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Related News

Latest News