தமிழகத்தில் நடப்பாண்டு இறுதிக்குள், புதிதாக ஒரு லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது, தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்ட புள்ளிவிவர ஆய்வில் தெரியவநதுள்ளது.
தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ், மாநில அளவில் புற்றுநோய் பாதிப்புகள் கண்காணிக்கப்படுகின்றன. அதன்படி, 2012-ம் ஆண்டில் 53ஆயிரத்து 22 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர் என்பதும் , 2021ம் ஆண்டில் 76 ஆயிரத்து 968 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
2025 இறுதிக்குள் புதிய புற்றுநோய் பாதிப்பு பட்டியலில், ஒரு லட்சத்து 97 பேர் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, வாய், பெருங்குடல், வயிறு, நுரையீரல், நாக்கு, மார்பகம், கர்ப்பப்பை வாய், கருமுட்டை, பெருங்குடல் புற்றுநோய் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.