Thursday, January 15, 2026

RCB வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல், ஒருவர் உயிரிழப்பு?

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றியை கொண்டாட கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெருங்களூரு வந்தடைந்தனர்.

இந்நிலையில் பெங்களூர் அணி வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Related News

Latest News