தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் மீனம்பாக்கம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் அதிகமாக கட்டணம் வசூலித்த 18 பேருந்துகளுக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.