Friday, December 27, 2024

சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர் கைது

மயிலாடுதுறை அருகே, சிறுமியிடம் தகாத முறையில் நடந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த முதியவர் நாராயணசாமி. இவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் நாராயணசாமியை கைது செய்தனர்.

Latest news