Sunday, June 22, 2025

அய்யோ! ‘அந்த’ மைதானமா? IPL ‘பைனல்’ எங்கேன்னு பாருங்க!

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட IPL போட்டிகள், மீண்டும் மே 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் Play Off வாய்ப்பினை உறுதி செய்துள்ளன.

மீதமுள்ள 1 இடத்திற்கு மும்பை, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தநிலையில் இறுதிப்போட்டியை தீர்மானிக்கும் Qualifier 1, Qualifier 2, மற்றும் Eliminator போட்டிகளுக்கான மைதானங்களை BCCI இறுதி செய்துள்ளது.

அதன்படி Qualifier 1, மற்றும் Eliminator போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தின் Mullanpur Stadiumல் மே 29, 30 தேதிகளில் நடைபெறுகிறது. Qualifier 2 மற்றும் IPL இறுதிப்போட்டி இரண்டும் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், ஜூன் 1 மற்றும் 3 தேதிகளில் நடைபெற உள்ளது.

2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கு தான் நடைபெற்றது. இதில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம் சூடியது. அத்துடன் வெற்றி, தோல்வியை எளிதாக கணிக்க முடியாத வகையில் இந்த மைதானம் உள்ளது.

எனவே IPL இறுதிப்போட்டியை BCCI அங்கு நடத்துவது, அவ்வளவு நன்றாக இல்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தான் IPL இறுதிப்போட்டியினை நடத்த வேண்டும் என்று, முன்னாள் BCCI தலைவர் கங்குலி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

முன்னதாக இந்த போட்டிகள், ஹைதராபாத்தின் ராஜிவ்காந்தி மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானங்களில் நடைபெற இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news