Monday, February 16, 2026

முதல்வர் வருகை – சாக்கடை கால்வாயை துணியால் மூடிய அதிகாரிகள்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மதுரைக்கு வர உள்ள நிலையில் அங்கு தூர்வாரப்படாத கால்வாயை துணியால் மூடி மறைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோரிப்பாளையம் பகுதியில் இருந்து நரிமேடு பகுதி வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் பகுதியில் உள்ள பந்தல்குடி கால்வாய் முழுவதிலும் திரைச்சீலைகளால் மூடப்பட்டுள்ளன. கால்வாயை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களோடு சேர்த்து திரைசீலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களை கூட எடுக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கழிவுநீர் கால்வாய் முதலமைச்சர் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அலங்கார துணிகளை வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாயை சுற்றி திரைசீலைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அவசர அவசரமாக அகற்றப்பட்டது.

Related News

Latest News