Thursday, December 25, 2025

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய, அலுவலக உதவியாளர் கைது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இந்த பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் பாலியல் சீண்டல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது இரண்டு மாணவிகள், விழிப்புணர்வு முகாம் நடத்திய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். அதில் இந்தப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் ராஜமாணிக்கம் (38), எங்களிடம் ஆபாச படங்களை தொடர்ந்து காண்பித்து பார்க்க கூறுகிறார் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு குழு அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், பள்ளி அலுவலக உதவியாளரான ராஜமாணிக்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News