Thursday, March 27, 2025

சிக்கன் சமைக்காததால் ஆத்திரம் : மனைவியை அடித்து கொன்ற கணவன்

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்தில் உள்ள கடையில் சிக்கன் வாங்கிய கணவர் தனது மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்லியுள்ளார்.

வெளியே சென்று இரவு வீடு திரும்பிய அவர் தனது மனைவி சிக்கன் சமைக்காததால் ஆத்திரமடைந்து மனைவிவை பலமாக தாக்கியுள்ளார். இதில், தரையில் விழுந்த அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Latest news