இலங்கையை வளைத்த சீனா
இலங்கை நாடாளுமன்றம் மசோதா ஒன்றை சென்ற ஆண்டு(2021)
நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் ஹம்பந்தோட்டாவில் உள்ள
துறைமுகம் ஏறக்குறைய சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வர
இலங்கை அரசு அனுமதியளித்துவிட்டது.
தலைநகர் கொழும்புவில் இந்தத் துறைமுகம் உள்ளது.
இதன்மூலம் சுமார் 540 ஏக்கர் நிலப்பரப்பு சீனாவின்
பகுதியாக மாறியுள்ளது. இலங்கையின் முதல் சிறப்புப்
பொருளாதார மண்டலம் அமைக்க 1.2 பில்லியன் டாலர்
முதலீட்டில் 99 வருடக் குத்தகைக்கு அனுமதியளித்துள்ளது.
இந்த மசோதா சீனாவின் யென் உள்பட எந்தப் பணத்தையும்
அதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் பயன்படுத்திக்
கொள்ள அனுமதிக்கிறது. இதன்மூலம் சுமார் 2 லட்சம்
பணியாளர்களுக்கு சீனப் பணமான யென் வழங்கப்படுவது
உறுதியாகிவிட்டது.
அதுமட்டுமல்ல, சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தப்
பகுதிக்குள் இலங்கைப் பிரஜை செல்ல வேண்டுமானாலும்
சீனப் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இதற்கான பாஸ்போர்ட்டை சீனா அறிமுகம் செய்துள்ளது.
அதில் இலங்கை முத்திரைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
சீன மொழி முதலிலும், அதன்கீழ் ஆங்கிலமும் இடம்பெற்றுள்ளன.
கொழும்புத் துறைமுக நகரம், சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதி,
சீன மக்கள் குடியரசு என்று இரண்டு மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.
இப்போதே சீனர்களின் நடமாட்டத்தை இலங்கையின்
பல நகரங்களுள் காணமுடிகிறது. இப்போக்கு அதிகரித்தால்,
எதிர்காலத்தில் முற்றிலும் இலங்கையை ஆதிக்கம் செலுத்தும்
அளவுக்கு சீனா வந்துவிடுமெனத் தெரிகிறது.
இந்தியாவைச் சுற்றி வளைக்கும் எண்ணத்துடன் சீனா
இவ்வாறு செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி
இலங்கையிலிருந்து 297 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.
மிக அருகில் வந்ததன் மூலம் இந்தியாவைத் தாக்க சீனாவுக்கு
வசதியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து பாக்கிஸ்தானிலும்
துறைமுகம் அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
திபெத்திலும் இதுபோல கால்பதிக்க சீனா திட்டமிட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.
இந்தியாவை நான்குபுறமும் தாக்க வசதியாக சீனா திட்டமிட்டு
இத்தகைய திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது.