மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, ஒபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :ஜெயலலிதா இருந்தவரை கட்சியை எந்தளவுக்கு நிலைநிறுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும். வசந்த காலமாக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை, இன்றைக்கு மாற்றி இருக்கிறவர்கள் யார் என்று உங்களுக்கே நன்றாகவே தெரியும்.
நடைபெற்ற 11 தேர்தல்களிலும் கழகம் தோல்வியைத்தான் சந்தித்தது. இதற்கெல்லாம் காரணம், ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று அடம்பிடித்து அதை ஏற்றுக்கொண்டவர்கள்தான். தொண்டர்களுடைய விருப்பம் கட்சி இணைய வேண்டும் என்பதுதான். தொண்டர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் என அவர் பேசியுள்ளார்.