Wednesday, December 17, 2025

chatgpt-யில் இனி ஷாப்பிங்! PayPal உடன் மெகா டீல்! ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சி!

ஆன்லைன் ஷாப்பிங் செய்ய நாம என்ன பண்ணுவோம்? அமேசான், ஃபிளிப்கார்ட்னு பல வெப்சைட்களுக்கு போவோம். ஆனா, இனி நீங்க பேசிக்கிட்டு இருக்குற சாட்ஜிபிடி-யிலேயே உங்களுக்கு வேணுங்கிற பொருளை வாங்கிடலாம். ஆமாங்க, உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் OpenAI நிறுவனத்தின் சாட்ஜிபிடி-யும், உலகப் புகழ்பெற்ற பேமெண்ட் நிறுவனமான பேபாலும்(PayPal) கைகோர்த்துள்ளன.

இந்த மெகா டீல் மூலமா, சாட்ஜிபிடி செயலியை விட்டு வெளியே வராமலேயே, ஒரு பொருளைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டு, அது பிடிச்சிருந்தா, அங்கேயே பேபால் மூலமா உடனடியாகப் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். பயனர்களுக்கு வங்கிக் கணக்கு, பேபால் பேலன்ஸ், அல்லது கிரெடிட்/டெபிட் கார்டுனு பல வழிகளில் பணம் செலுத்தும் வசதியும் இதில் இருக்கு. இதனால கோடிக்கணக்கான சாட்ஜிபிடி பயனர்கள், இனி நேரடி வர்த்தகர்களாக மாறப்போறாங்க.

பயப்படாதீங்க, இதுல பேபாலின் பிரத்யேக பாதுகாப்பு அம்சங்கள், ஆர்டர் டிராக்கிங் வசதி, வாங்கிய பிறகு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கான கருவிகள்னு எல்லா பாதுகாப்புகளும் இதிலும் கிடைக்கும். பேபால் தலைமைச் செயல் அதிகாரி அலெக்ஸ் கிறிஸ் சொல்லும்போது, “ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களைக் கண்டுபிடிக்க சாட்ஜிபிடி-யைப் பயன்படுத்துகிறார்கள். இப்போது இந்த இரண்டும் இணைகிறது” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இந்த பேபால் அறிவிப்பு ஒருபக்கம் இருக்க, இதுக்கு அடித்தளமா இருக்கிற OpenAI நிறுவனத்திலும் ஒரு பெரிய மாற்றம் நடந்திருக்கு. OpenAI-ன் முக்கிய முதலீட்டாளரான மைக்ரோசாஃப்ட், அந்நிறுவனத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி, OpenAI இனி லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், பொது நன்மையையும் சமநிலைப்படுத்தும் ஒரு நிறுவனமாக மாறும் திட்டத்திற்கு மைக்ரோசாஃப்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு, OpenAI நிறுவனத்தில் மைக்ரோசாஃப்ட்டின் முதலீட்டின் மதிப்பு சுமார் 135 பில்லியன் டாலராக இருக்கும். இதன்மூலம் OpenAI-ன் 27 சதவீதப் பங்குகளை மைக்ரோசாஃப்ட் வைத்திருக்கும். ஆக, இந்த புதிய கூட்டணி, ஆன்லைன் ஷாப்பிங்கில் மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு உலகிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது.

Related News

Latest News