விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. சில நாட்களுக்கு முன்பு கூமாபட்டி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. “ஏங்க.. கூமாப்பட்டிக்கு வாங்க.. தமிழ்நாட்டிலேயே ஏன்.. உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க” ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க” என தங்கபாண்டி என்ற நபர் வெளியிட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
கூமாப்பட்டி கிராமத்தை டிரெண்ட் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி பின்னர் தனது கோரிக்கையை பதிவு செய்தார். பிளவக்கல் பெரியாறு அணையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் பணி எதுவும் நடக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது.