Monday, January 20, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியில்லை – அதிமுக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தொடர்ந்து தற்போது ஈரோடு இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்துள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக 66,000 வாக்குக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news