நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில், சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், தனது முதல் 2 சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்து, 3-வது சுற்றில் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.
இதனையடுத்து 4-வது சுற்று டிரா ஆன நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குகேஷ் வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் குகேஷ் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்துள்ளார். 4-வது சுற்று முடிவில் கார்ல்சென் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.