Saturday, December 27, 2025

திருச்சி ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது

திருச்சி ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபரை திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் கைது செய்தனர்.

திருச்சி ரெயில்வே பாது காப்பு படையினர் திருச்சி ரெயில் நிலைய நடைமேடைகளில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை சோதனை செய்தனர்.

அவர் வைத்திருந்த ஒரு மூட்டையை சோதனை செய்த போது, அதில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியை சேர்ந்த அக்ஷயா மாஜி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related News

Latest News