Friday, August 1, 2025

4000 கிலோ அரிசி, 1000 கிலோ கறி – தடபுடலாக நடந்த அசைவ விருந்து

மதுரை திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையாகோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவிழா போல நடைபெறும். இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆண்கள் மட்டும் பங்கேற்பார்கள்.

இந்த திருவிழற்காக கோவிலை சுற்றியு உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பு நிற கிடாய்களை நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். இந்த திருவிழாவில் 4000 கிலோ அரிசி, 56 கிடாய்கள் வெட்டப்பட்டு 1000 கிலோ கறி சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு அதை ஆண்கள் மட்டும் சமைத்து சாப்பிட உள்ளனர். இதற்காக கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள்.

கறி விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்தபின்னர் ஒரு வாரம் கழித்து பெண்கள் அந்த பகுதிக்கு சாமி கும்பிட வருவார்கள். இந்த விநோத திருவிழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News