ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் வி.சி சந்திர குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் போட்டியிடும் வி.சி சந்திர குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரை 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இன்று ஒரே நாளில் 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.