Saturday, April 19, 2025

பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தும் பணி டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பழைய வாகனங்களால் காற்று மாசு ஏற்பட்டதால், அவற்றுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பழைய வாகனங்களை கண்டறிய, பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கேமரா பொருத்தப்பட்டதும் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க மறுக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

Latest news