Sunday, June 22, 2025

இனி யாராலயும் ‘தடுக்க’ முடியாது RCBக்குத் திரும்பும் ‘உலகக்கோப்பை’ வீரர்

போர் பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட IPL போட்டிகள், மே 17ம் தேதி மீண்டும் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 16 பாயிண்டுகளுடன் கிட்டத்தட்ட Play Off வாய்ப்பினை உறுதி செய்து விட்டது.

என்றாலும் கொல்கத்தாவிற்கு எதிராக வெற்றி பெற்றால், பாயிண்ட் டேபிளில் முதல் இடத்திற்கு முன்னேறி விடலாம். இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரால், IPL தொடரில் ஆடிவந்த ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

ஒவ்வொரு அணியின் வெற்றியிலும் வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். IPL தொடர் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் வெளிநாட்டு வீரர்கள், விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வீரர்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அணிகள் இருக்கின்றன.

இந்தநிலையில் நடப்பு தொடரில் வெறிகொண்டு ஆடிவரும் RCBக்கு, நல்லதொரு விஷயம் நடந்துள்ளது. பெங்களூரு அணியின் தொடர் வெற்றிகளுக்கு துருப்புச்சீட்டாக இருந்துவரும், ஆஸ்திரேலிய வீரர் Josh Hazlewood மீண்டும் அணியுடன் இணையவுள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். கோலி, சால்ட், ஜிதேஷ், டிம் டேவிட்,குருணால் பாண்டியா என அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் Thanos போல வலிமையுடன் இருக்கிறது.

பவுலிங்கில் தான் லேசாகத் திணறுகின்றனர். என்றாலும் பிற அணிகளின் கையில் இருக்கும் வெற்றியை தட்டிப் பறிப்பதில் வல்லவரான Hazlewood, மீண்டும் பெங்களூரு அணிக்குத் திரும்புவது நிச்சயம் அந்த அணிக்கு மிகப்பெரும் Boost ஆக இருக்கும்.

இதற்கிடையே கைவிரல் காயம் காரணமாக கேப்டன் ரஜத் படிதார், அணியை வழிநடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் போட்டிகளுக்கு விராட் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news