Thursday, December 11, 2025

“இனி பேச்சே இல்ல… வீச்சு தான்!” சீனா தலையில் இடியை இறக்கிய டிரம்ப்! கதறும் ஜி ஜின்பிங்!

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், இப்போது அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரத்தை ஏவியுள்ளார். அதாவது, சீனாவிலிருந்து வரும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 சதவீதம் வரி!

தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், “நவம்பர் 1, 2025 முதல், சீனா தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும், தற்போதுள்ள வரிக்கு மேல், கூடுதலாக 100% வரி விதிக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, முக்கியமான மென்பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த திடீர் கோபத்திற்குக் காரணம் என்ன? டெக்னாலஜி உலகின் உயிர்நாடியான ‘அரிய பூமி தாதுக்கள்’ (Rare Earth Minerals) ஏற்றுமதிக்கு சீனா மேலும் கட்டுப்பாடுகளை விதித்ததுதான். ஸ்மார்ட்போன் முதல் போர் விமானங்கள் வரை அனைத்திற்கும் தேவையான இந்தத் தாதுக்களை, சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு உலகை மிரட்டி வந்தது. இனி அந்த ஆட்டம் செல்லாது என்பதை உணர்த்தவே, டிரம்ப் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

“சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இனி சந்திக்க எந்தக் காரணமும் இல்லை” என்று கூறியுள்ள டிரம்ப், “சீனாவின் இந்த விரோதப் போக்கிற்கு, நாங்கள் மிக வலுவான பதிலடி கொடுப்போம்” என்று எச்சரித்துள்ளார். உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளுக்கு இடையேயான இந்த மோதல், உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இனி என்ன நடக்கும் என்பதை உலகமே பதற்றத்துடன் உற்று நோக்குகிறது.

Related News

Latest News