ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள். குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்தபிறகே பணப் பலன்களைப் பெற முடியும். இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை தொடர்ந்து வருவதாக அரசு ஊழியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.