எத்தனை கோடி தந்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்.. ஜிவி பிரகாஷ் அதிரடி

ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். இளம் வயதிலேயே இசையில் அறிமுகமான அவர், பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமின்றி, நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அவர், கதாநாயகனாக நடித்த பல படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான சில விளம்பரங்களில், எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நடிக்க மறுத்துவிட்டேன் ” என்ற கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அந்த பேட்டியில் பொதுமக்களின் நலன் பாதிக்கப்படும் விஷயங்களில் பிரபலங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அல்லது தவறான தகவல்களை பரப்பக்கூடிய தயாரிப்புகளை விளம்பரம் செய்வது குறித்து அவர் கவலையை பகிர்ந்து இருக்கிறார். சமூகத்தில் பிரபலங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பணம் மட்டும் முக்கியமில்ல, நம் மீது மக்களும், ரசிகர்களும் வைத்திருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நம்மை நம்புகிறார்கள் என்பதற்காக அந்த நம்பிக்கையை வைத்து நம்ம தப்பான பொருட்களை விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிப்பது தவறு என்று அவர் வெளிப்படையாக கருத்து சொல்லி இருப்பது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Related News

Latest News