அதிமுக உறுப்பினர்கள் பேச போதிய நேரம் அளிக்கப்படவில்லை எனவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்வதாகவும் கூறி, அதிமுக சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 63 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அ.தி.மு.க. கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக 154 பேர் வாக்களித்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் அதிமுக உட்கட்சி குழப்பத்தை திசைதிருப்பவே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் யாருடைய தலையீடு இல்லாமல், பேரவையை நடத்தி வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.