Thursday, July 17, 2025

பள்ளி வகுப்பறையில் மாரடைப்பால் உயிரிழந்த 9 வயது சிறுமி

ராஜஸ்தான் மாநிலத்தில் 9 வயது சிறுமி பள்ளி வகுப்பறையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகாரின் டான்டா நகரை சேர்ந்த சிறுமி பிராச்சி குமாவத் (வயது 9) இவர் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார் . கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பள்ளியில் உணவு சாப்பிட சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

9 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news