Saturday, December 6, 2025

நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற லாரி விபத்து : 39 பேர் பலி

நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News