விரைவில் இன்ஸ்டாகிராமில் ” டிஜிட்டல் சொத்துக்கள் ” – மார்க் ஜுக்கர்பெர்க்

406
Advertisement

மக்களை மெட்டாவேர்ஸுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை பேஸ்புக் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதவாது மெய்நிகர் ரியாலிட்டி மூலம் டிஜிட்டல் முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். கடந்த ஆண்டு பேஸ்புக் தன்னை மெட்டா என மறுபெயரிட்டபோது இந்த இலக்கு தெளிவாகியது.

இப்போது,இந்நிறுவனம் என்.எஃப்.டிகளுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் அந்த திசையில் மற்றொரு படி எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் , ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் , இன்ஸ்டாகிராம் பயனர்கள் விரைவில் புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு தளத்தில் என்.எஃப்.டிகளை அச்சிட முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

என்.எஃப்.டி எனப்படும் “நான் ஃபங்கியபில் டோக்கன்” ஒரு வகை டிஜிட்டல் டோக்கன் ஆகும்.அதாவது, இணைய பணமான பிட்காயின் போன்ற இன்னொரு வடிவம் என்று சொல்லலாம். நிஜ உலக சொத்துக்கள் அல்லது டிஜிட்டல் கலைப்படைப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை உருவாக்கி, அவற்றை விற்பதற்கு என்.எஃப்.டி டோக்கன்கள் உதவுகின்றன.

இது குறித்து மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில் , இன்னும் சில மாதங்களில் என்.எஃப்.டி இன்ஸ்டாகிராமிற்கு கொண்டு வரப்படும். அதை வாங்குவதற்கும் விற்பதற்கும் கிரிப்டோ வேலட்டும் இன்ஸ்டாகிராமில் இடம்பெறும்.

மெட்டாவெர்ஸில் இயங்குபவர்கள் என்.எஃப்.டியில் தங்களுக்கு பிடித்த டிஜிட்டல் உடை, தோற்றத்தை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.