உணவுப் பட்டியலுடன் புதுவிதத் திருமண அழைப்பிதழ்

362
Advertisement

திருமண அழைப்பிதழில் ஓரடி நீள மெனு அச்சிடப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

திருமண விருந்து என்றாலே நாவில் நீர் ஊறும். அறுசுவை உணவுகளும் உணவுப் பதார்த்தங்களும் இடம்பெற்றிருக்கும். அதில் பெங்காலித் திருமணமும் விதிவிலக்கல்ல.
மேற்கு வங்காள மாநிலம், சிலிகுரி பகுதியில் சுஷ்மிதா அனிமேஷ் ஆகியோரின் திருமண அழைப்பிதழ் அது.

இந்தத் திருமண அழைப்பிதழ் 2013 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது என்றபோதிலும், சமீபத்தில் வலைத்தளங்களில் வலம்வரத் தொடங்கியுள்ளது.

அந்த அழைப்பிதழில் 30 செ.மீ நீளத்துக்கு விதம்விதமான உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

அந்த மெனுவில் மீன் காலியா, ஃப்ரைடு ரைஸ், மட்டன் மசாலா, மாம்பழச் சட்னி உட்பட பலவகை உணவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அழைப்பிதழ் தற்போது இணையதளவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.

இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு வயிறார உண்டு, மணமக்களை விருந்தினர்களும் உறவினர்களும் நண்பர்களும் அண்டை வீட்டாரும் வாயார வாழ்த்தியிருப்பார்கள் என உறுதியாக நம்பலாம்.

பொதுவாக, திருமண அழைப்பிதழில் முகூர்த்த நேரம், திருமணம் நடைபெறும் இடம் ஆகியவற்றுடன் உற்றார்- உறவினர்களின் பெயர்கள்தான் இடம்பெற்றிருக்கும். ஆனால், நீண்ட உணவுப் பட்டியலுடன் அச்சிடப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் விருந்தினர்களை மட்டுமன்றி, புதுமையாக அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.