தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை கு அமைச்சர்கள், நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
ஜெர்மனி புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் அன்புடன் முதலீடுகளை ஈர்க்க ஒருவார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன் என்று கூறினார்.
திராவிட மாடல் ஆட்சியில் 10.62 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் முதலீடுகள் மூலம் 32 லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி இருந்ததோ, தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்களும் அப்படியே இருக்கும் என்று நினைத்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆனால், நாங்கள் போடும் ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று பதிலடி கொடுத்தார்.