‘வாத்தி’ படத்திற்கு திடீரென கிளம்பிய எதிர்ப்பு! பெயர் மாற்ற வலுக்கும் கோரிக்கை

137
Advertisement

பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்திற்கு விறுவிறுப்பாக ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

போட்டி எதுவும் இல்லாமல் படம் தனியாக வெளியாவதால், சுமூகமாக நல்ல வசூலை குவிக்கும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், புதிய பிரச்சினை ஒன்று கிளம்பியுள்ளது.

‘வாத்தி’ என்ற பெயர் ஆசிரியர்களையும் ஆசிரியப்பணியையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக, ஆசிரியர் சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

புதுக்கோட்டை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 4.5 லட்சம் ஆசிரியர்களுக்கும் இந்த பெயர் மன உளைச்சல் அளிப்பதாகவும், தங்கள் உணர்வுகளை கருத்தில் கொண்டு படத்தின் பெயரை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கடைசி நிமிடத்தில் வந்து சேர்ந்துள்ள பெயர் சிக்கல் ‘வாத்தி’ படக்குழுவுக்கு சவாலாகவே அமைந்துள்ளது.