விபரீத கேன்சரை விரட்டும் வீட்டு சாம்பாரின் SUPERPOWER!

286
Advertisement

டிபன் தொடங்கி சாதம் வரை சாம்பார் இல்லாமல் சாப்பிடவே முடியாதென்ற நபர்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாது இந்தியாவின் பிற மாநிலங்கள், மாலத்தீவு மற்றும் இலங்கையிலும் இருக்கிறார்கள்.

எனினும், இளைய தலைமுறையினர் பலருக்கும் சாம்பார் போன்ற உணவுகளை சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்தியரும் இரைப்பை குடல் வல்லுநருமான டாக்டர் பழனியப்பன், சாம்பார் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ஒரு பிரிவு எலிகளிடம் சாம்பாரும் மற்றோரு பிரிவு எலிகளிடம் தண்ணீரும் கொடுத்து பின் கேன்சர் தொடர்பான DMH எனும் உட்பொருள் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் டைமெதில் ஹைட்ரேசினால் ஏற்படும் பெருங்குடல் பாதிப்பை சாம்பார் தடுப்பது தெரியவந்துள்ளது. உலகிலேயே அதிக உயிர்களை பலி வாங்குவதில் மூன்றாம் இடத்தில இருக்கும் பெருங்குடல் புற்றுநோயை சாம்பார் ஓரளவுக்காவது தடுக்கும் என்பதே நல்ல செய்தி தானே.

மேலும், 70% புற்றுநோய் உணவுப்பழக்கத்தினால் தான் ஏற்படுகிறது என்பதால் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைபிடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.