கோடை காலத்தில் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு வெளிச்சந்தையில் 7 ஆயிரத்து 40 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தினசரி மின்சார தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடைக்காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின்சார தேவை அதிகரிக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது.
மே மாதத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் என கணக்கிடபட்ட நிலையில், மழையின் காரணமாக மின்சார தேவை அதிகரிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 2026-27 ஆண்டில் தமிழகத்தின் மின்சார தேவை 23 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் 7 ஆயிரத்து 40 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்திற்கு மின்சாரஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.