சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக நாளை முக்கிய வழித்தடங்களில் 4 புதிய மின்சார ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்ட்ரல் – ஆவடிக்கு காலை 11:15 மணிக்கும், ஆவடி – சென்ட்ரலுக்கு அதிகாலை 5:25 மணிக்கு நாளை முதல் புதிய மின்சார ரயில்கள் சேவை துவங்கப்படுகிறது.
சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10:35 மணிக்கும், கும்மிடிப்பூண்டி – சென்ட்ரலுக்கு காலை 9:10 மணிக்கும் புதிய மின்சார ரயில்கள் சேவை துவங்கப்படுகிறது.