இந்தியாவில் ஆதார் கார்டு தெடர்பான புதிய விதிமுறைகள் கடந்த ஜூலை 2,2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.இந்த மாற்றங்கள்,ஆதார் பதிவு மற்றும் தகவல் புதிப்பிப்பை எளிதாக்கவும் ,அதன் பாதுகாப்பை அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இப்ப்போது ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது,அல்லது அதி தகவல்களை மாற்றும் போது,ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் புதியதாக தொகுக்கப்பட்டுள்ளன.
புதிய பட்டியலில் முக்கியமாக பாஸ்போர்ட், votterid,டிரைவிங் லைசென்ஸ்,மின்சாரம்,நீர்,வாயு போன்றவைகளின் பில்கள் முக்கியமாக சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.அதோடு பிறப்பு சான்றிதழும் முக்கிய ஆவணமாக இருக்கின்றது.
முக்கியமாக 2023 அக்டோபர் 1-க்கு பிறகு பிறந்த இந்திய மற்றும் NRI குழந்தைகளுக்கு, ஆதார் பதிவு செய்ய பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணமில்லாமல், ஆதார் பெற முடியாது.
ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற தகவல்களை மாற்ற விரும்பினால்,
அதற்கேற்ற ஆவணங்கள் அவசியம்.
எடுத்துக்காட்டாக, பெயர் மாற்றத்திற்கு அரசு வெளியிட்ட தகவலின் படி, பாலின மாற்றத்திற்கு மருத்துவ சான்றிதழ், பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ்கள் ஆகியவை தேவைப்படும்.
ஒரே நபருக்கு பல அதற் எண்கள் இருந்தால் ,முதலில் பயோ மெட்ரிக் தகவல்களுடன் உருவாக்கப்பட்ட ஆதார் செல்லுபடியாகும்.மற்றவை தானாகவே ரத்து செய்யப்படும்.
oci கார்டு வைத்தவர்கள்,வெளிநாட்டு குடியுரிமையாளர்கள், அந்த அந்த நாட்டிற்கேற்ற தனிப்பட்ட அவண்னங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நவம்பர் 25 முதல் அத்தாரில் பெயர்,முகவரி,பிறந்த தேதி ,மொபைல் எண் போன்றவற்றை வீட்டில் இருந்தே மாற்றலாம். ஆனால் biometric தகவலை புதுப்பிக்க மட்டும் நேரில் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.
இதனால் மக்களுக்கு நேரம் வீணாகும் சூழ்நிலையும், அலுப்பும் குறையும்.
மேலும் புதிய மொபைல் செயலி மூலம், QR குறியீடுகள் வழியாக மின்ஆதார் பகிரும் வசதியும் அறிமுகமாகும்.
இதனால் ஆதார் நகலை எங்கேயும் பிரிண்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், பாதுகாப்பாக தகவல்களை பகிர முடியும்.
இந்த புதிய விதிமுறைகள், ஆதார் சேவையை சீர்மைப்படுத்துவதோடு, மோசடி, போலி ஆதார் எண்கள் போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும்.
அனைவரும், ஆதார் பெறவோ, புதுப்பிக்கவோ திட்டமிடுவதற்கு முன்பாக, இந்த விதிமுறைகளை அறிந்து கொண்டு, தேவையான ஆவணங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.