Saturday, July 5, 2025

விக்ரம் வேதா டீசரை வச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்

2017ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், தமிழி வெளியான விக்ரம் வேதா வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

மாதவன், விஜய் சேதுபதி நடித்த இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக்கான, விக்ரம் வேதா ஹிந்தி டீஸர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் viewsஐ கடந்துள்ளது.

தமிழ் மற்றும் ஹிந்தி விக்ரம் வேதாவை ஒப்பிட்டு, அதிலும் குறிப்பாக Hrithik ரோஷனின் கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

விக்ரமாக Saif Ali Khan நல்ல தேர்வாக உள்ளதாக பரவலான கருத்துக்கள் நிலவினாலும், Hrithik வலுவான வேதாவாக தடம் பதிப்பாரா என்பது கேள்விக்குறியே.

தமிழ் விக்ரம் வேதாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் BGM முக்கிய பங்கு வகித்தது. இந்த படத்திலும் Sam CS இன் ஒரிஜினல் BGMஐயே படக்குழு பயன்படுத்தினாலும், பாடல்களுக்கு விஷால் மற்றும் ஷேகர் ஆகியோர் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news