நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய மாமியார்! வைரலாகும் வீடியோ

28
Advertisement

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம், வாடகை தாய் விவகாரம் என தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வந்தார் நயன்தாரா.

இந்நிலையில், தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு கடனை அடைக்க நயன்தாரா நான்கு லட்சம் பண உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவனின் தாயாரான மீனாக்குமாரி இவ்வாறாக ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார். நயன்தாராவின் வீட்டில் மொத்தம் எட்டு பேர் பணியாற்றுவதாகவும், கடன் தொல்லையில் சிக்கி தவித்த அந்த பணிப்பெண்ணுக்கு உதவ நயன்தாராவின் மனசு தான் காரணம் என அவர் புகழ்ந்து பேசினார்.

Advertisement

அது மட்டுமில்லாமல், நயன்தாராவின் தாயார் அதே பெண்ணுக்கு இரண்டு தங்க வளையல்களை வழங்கியதாகவும் மீனா தெரிவித்தார். மேலும், நேர்மையாக மற்றும் உண்மையாக உழைப்பவர்களை என்றுமே மதிப்பதாக குறிப்பிட்ட அவர், அப்படிப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.