நயன்தாரா கல்யாணத்துக்கு ஒரு இயக்குநரா?

252
Advertisement

‘நானும் ரௌடி தான்’ படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மலர்ந்த காதல் படிப்படியாக வளர்ந்து வந்தது. அவ்வப்போது கல்யாணம் எப்ப என்று நிலவி வந்த கேள்விக்கு விடை கொடுத்துள்ளார் நயன்தாரா.

முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்குவது போன்ற திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடக்க, கல்யாணமே சினிமா போன்று எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

திருமணத்தை இயக்க விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுதம் வாசுதேவ் மேனன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

மேலும், தங்கள் திருமண காட்சிகளின் டிஜிட்டல் உரிமையை பிரபல OTT தளத்துக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 8ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் ஜூன் 9ஆம் தேதி அன்று மகாபலிபுரத்தில் திருமணமும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.