இனிதே முடிந்த நயன் விக்கி திருமணம்

408
Advertisement

பல நாள் எதிர்பார்ப்புகளுக்கு பின் இன்று பல்வேறு திரைத்துறை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் OTT வழியாக நேரலையில் பார்த்த ரசிகர்கள் முன்னிலையில் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றது.

முன்னணி நட்சத்திரங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, விஜய், சூர்யா,கார்த்தி, விக்ரம் பிரபு மற்றும் அஜித்தும், பிரபல இயக்குநர்களான மணி ரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சிவா மற்றும் ஹரி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

திருமண மெனுவில் காதல் பிரியாணி துவங்கி தண்ணீர் பாட்டிலில் காதல் கதையை அச்சிட்டதெல்லாம் சுவாரஸ்ய நிகழ்வுகள். திருமண புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட நிலையில் இணையத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.