நயன்தாராவா இது? இப்படி ஆளே மாறிட்டாங்களே……வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

298
Advertisement

விக்னேஷ் சிவனுடன் கல்யாணம், வாடகை தாய் விவகாரம் என தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வந்த நயன்தாரா சிலகாலம் ஸ்பாட்லைட்டில் படாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நயன்தாரா மற்றும் மருத்துவர் ரெனிட்டா ராஜன் இணைந்து நடத்தும் ‘The Lipbalm Company’ நிறுவனம் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. பெண்கள் பயன்படுத்தக் கூடிய லிப்ஸ்டிக் மற்றும் லிப் balmகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இந்த நிறுவனம் ஓராண்டிலேயே நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தில் நயன்தாராவும் பங்கேற்று ‘limited edition’ lip balm packகளில் autograph போட்டுள்ளார்.

திருமணத்தின் போது பார்த்ததற்கு நயன்தாரா தற்போது வித்தியாசமாக தெரிவதாக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வர, அண்மையில் வெளியான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.