Thursday, March 27, 2025

கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை : அண்ணாமலைக்கு நத்தம் விஸ்வநாதன் பதில்

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம் என அவர் பேசினார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை. அவர் எங்களை சொல்லவில்லை. எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக தான்” என கூறியுள்ளார்.

Latest news