Thursday, March 20, 2025

“அண்ணாமலை ஐபிஎஸ் படித்த பட்டதாரி தானா?” – நாஞ்சில் சம்பத் கேள்வி

ராமநாதபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை குறித்து கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

பொதுக்கூட்டத்திற்கு பின்  செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் கூறுகையில் : இந்திய துணை கண்ட வரலாற்றில் 12 துறைகளில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. அதற்கு திமுக ஆட்சிதான் காரணாம். இந்த அபரா சாதனையையால் திமுகவிற்கு கிடைத்திருக்கிற வெளிச்சத்தை பார்க்க முடியாமல் அண்ணாமலையின் கண்கள் கூசுகிறது. அவர் கண்கள் குருடானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தவெகவின் தலைவர் விஜய்யா இல்லை பிரசாந்த் கிஷோரா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. எங்கே என்ன நடக்கிறது என்று விவரம் தெரியாமல் விஜய் இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Latest news