இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து சுவாச பிரச்சனை காரணமாக கடந்த 24-ந்தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தொடர் சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.