Monday, February 10, 2025

சீமான் மீது கடும் அதிருப்தி : திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 மாவட்டச் செயலாளர்கள், ஒரு மண்டல தலைவர் உள்ளிட்ட 3,000 பேர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைகின்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுக -வில் இணையும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 மாவட்டச்செயலாளர்கள், ஒரு மண்டல தலைவர் உள்ளிட்டோர் முதலமைச்சர் முன்னிலையில் திமுக – வில் இணைகின்றனர்.

இதையொட்டி, அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு மேள-தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியார் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை சீமான் தெரிவித்து வருவதை அடுத்து, அதிருப்தி அடைந்த அந்த கட்சியின் நிர்வாகிகள் திமுக-வில் இணைவதாக தெரிவித்தனர்.

Latest news