திடீரென உருவாகி பெரிதாகி கொண்டே போகும் பள்ளம்

183
Advertisement

தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சிலி நாட்டில் 656 அடி ஆழமும், 82 அடி அகலமும் கொண்ட ஒரு பள்ளம் தீடீரென உருவாகி, ஒரே வாரத்தில் இரு மடங்காக பெரிதாகியுள்ளது.

பள்ளம் தோன்றிய பகுதிக்கு அருகில் அல்காபரோசா செப்பு சுரங்கம் இருப்பதால், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சுரங்க பணிகள் இந்நிகழ்வுக்கு காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் சிலி நாட்டின், தேசிய புவியியல் மற்றும் சுரங்க சேவை துறை பள்ளத்தில் நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பள்ளம் உருவான காரணம் மற்றும் தன்மை தெளிவாக தெரியாத நிலையில், சுரங்க பணியிடம் மூடப்பட்டதோடு, பள்ளத்தை சுற்றி 100 மீட்டர் வரை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.