Wednesday, July 16, 2025

அண்டார்டிகாவில் நிகழும் மர்மம்! 1970 க்கு பிறகு கடலில் நடக்கும் அரிய ஆபத்து!

உங்களுக்கு தெரியுமா? உலகத்தின் தெற்குப் பகுதியில் ஒரு பெரிய மாற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.அண்டார்டிகாவை சுற்றியுள்ள south ocean இப்போது வெப்பமாகவும் அதிகமான உப்பாகவும் மாறிவிட்டது.

பல ஆண்டுகளாக அந்த கடல் பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது.ஆனால் 2015-ற்குப் பிறகு அதே ocean அதிகப்படியான பனிக்கட்டிகளை இழக்க ஆரம்பித்தது.இப்போது அந்த கடலில் கிரீன்லாந்து நாட்டின் பரப்பளவுக்கு சமமான பரப்பளவில் பனிக்கட்டிகள் இப்போது காணாமல் போயிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஏன் கவலையை ஏற்படுத்துகிறது தெரியுமா?

பொதுவாகவே பனிக்கட்டிகள் என்பது பூமிக்கு ஒரு இயற்கையான குளிர்சாதனமாகவே வேலை செய்து வருகின்றது.அவை சூரிய ஒளியை பிரதிபலித்து வெப்பத்தை தடுக்கின்றன. இப்போது அவை குறைந்துவிட்டதால், கடலின் மேல்பரப்பு அதிகமான வெப்பத்தை உறிந்து கொள்கிறது.

இதன் விளைவாக, கடலின் அடியில் இருக்கும் சூடான நீர் மேலே வர ஆரம்பிக்கிறது. அது மேலே உள்ள பனிக்கட்டிகளை மேலும் உருக்குகிறது.

இதுதான் இப்போது ஒரு ஆபத்தான சுற்றுசுழற்சி… முதலில் பனிக்கட்டி குறைகிறது → பிறகு கடலில் உப்பு அதிகரிக்கிறது → அதற்குப்பின் வெப்பம் மேலே வருகிறது →இதைத்தொடர்ந்து மீண்டும் பனிக்கட்டி உருகுகிறது.

இது இப்படி இருக்க ஆண்டார்டிகா கடலில் உள்ள மவுட் ரைஸ்(Maud Rise) பகுதியில், ‘போலின்யா’ (Polynya) என்ற ஒரு விசித்திரமான இயற்கை நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ‘போலின்யா’ என்றால், முழு கடல் பனியால் மூடப்பட்டிருக்க வேண்டிய இடத்தில், திடீரென பனி இல்லாமல், திறந்த நீர் மட்டும் இருக்கும் பகுதி ஆகும்.இப்போது இந்த நிகழ்வு 1970களுக்கு பிறகு முதன்முறையாக உருவாகியுள்ளது. அதன் பரப்பளவு, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வேல்ஸ் (Wales) என்ற நாட்டை விட நான்கு மடங்கு பெரியது ஆகும்.”

இப்போது இந்த நிகழ்வின் விளைவாக அந்த கடல் பகுதிகளில் வாழும் Penguins மற்றும் Krill என்று அழைக்கப்படும் கடல் உயிரினம் போன்ற பல உயிரினங்கள் தங்களுடைய வாழ்விடத்தை இழந்து வருகின்றன.

இந்த மாற்றங்கள் அந்த பகுதியுடன் மட்டும் முடிவடையவில்லை. பனிக்கட்டி குறைவதால், பூமியின் வெப்பநிலை உயரும். கடல் ஓட்டங்கள் மாறும். கடலோர நாடுகளில் புயல்கள் தீவிரமாகும்.மேலும் இது இந்தியாவையும் நேரடியாக பாதிக்கக்கூடிய ஒரு விஷயமாக எச்சரிக்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news