Sunday, April 20, 2025

மணிப்பூர் பாஜக தலைவர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

மணிப்​பூர் மாநிலத்​தைச் சேர்ந்த பாஜக மூத்த தலை​வர் முகமது அஸ்​கர் அலி என்பவர் பாஜக சிறு​பான்​மை​யினர் பிரிவு தலை​வ​ராக உள்​ளார். இவரது வீடு தவு​பால் மாவட்​டம் லிலாங் சட்​டப் பேர​வைத் தொகு​தி​யின் சம்ப்​ரு​கோங் மேமேய் பகு​தி​யில் அமைந்​துள்​ளது.

அண்​மை​யில் நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட வக்பு மசோ​தா, சட்​டத்​துக்கு ஆதர​வாக சமூக வலை​தளங்​களில் முகமது அஸ்​கர் அலி கருத்​துகளைப் பதி​விட்டு இருந்​தார். இந்​நிலை​யில், அவரது வீட்டை மர்மநபர்கள் சிலர் தீவைத்து எரித்தனர்.

அவரது வீட்​டில் யாரும் இல்​லாத​தால் எந்த உயிர்ச்​சேத​மும் ஏற்​பட​வில்​லை. இதையடுத்து போலீ​ஸார் அங்கு விரைந்து வந்து கும்​பலை விரட்​டியடித்​தனர். இதைத் தொடர்ந்து அங்கு 144 தடை​யுத்​தரவை ஆட்​சி​யர் பிறப்​பித்​துள்​ளார்.

Latest news