சிவகங்கை அருகே தனியார் பேருந்து நடத்துநரை மர்மநபர்களால் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சிறுகுடி கிராமத்தை சேர்ந்த தவச்செல்வம் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடித்து, மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.