எவரெஸ்ட் மலை ஏறி 10 வயது சிறுமி சாதனை

228
Advertisement

கடினமான செயலின் சரியான விளக்கம் தான் “சாதனை” என்பதை உணர்த்தியுள்ளார் 10 வயது சிறுமி.

மும்பையைச் சேர்ந்த 10 வயதான ரிதம் மமானியா  என்ற சிறுமி, எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (base camp) வரை ஏறி சாதனை படையுள்ளார்.மும்பையில்  5 ஆம் வகுப்பு படிக்கும் ரிதம், மே 6 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் எவரெஸ்ட் பேஸ் கேம்பை அடைந்தார்.தன் பெற்றோர்களுடன் இதனை 11 நாட்களில் , 5,364 மீட்டர் தூரம் பயணித்து  இளம் இந்திய மலையேறும் வீரர்களில் ஒருவரானார்,

இது குறித்து சிறுமி கூறுகையில் “ஸ்கேட்டிங்குடன், மலையேற்றம் எப்போதுமே எனது ஆர்வமாக இருந்து வருகிறது, ஆனால் இந்த மலையேற்றம் ஒரு பொறுப்பான மலையேற்ற வீரராக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது என்றார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில் ,ஐந்து வயதிலிருந்தே ரிதம் மலைகளை அளவிடுவதை விரும்புவதாகவும், அவரது முதல் நீண்ட பயணம் 21-கிமீ என்றும், அதன் பின்னர், அவர் மஹுலி, சோண்டாய், போன்ற  சில மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் ஏறி உள்ளார் என தெரிவித்தார்.

மேலும் ,பேஸ் கேம்ப் மலையேற்றத்தின் போது ரிதம் 8-9 மணிநேரம் பல்வேறு செங்குத்தான நிலப்பரப்புகளில் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், ஆலங்கட்டி மழை ,பனிப்பொழிவு மற்றும் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலையிலும் நடந்ததாக கூறினார்.